சென்னை, ஏப். 1: ஒகேனக்கல் கூட்டு குடி நீர்த் திட்டம் தொடர் பாக எழுந்துள்ள பிரச் னையில் தமிழகத்தின் உரிமைகளை எள்ளள வும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுரு கன் தெரிவித்தார்.ஒகேனக்கல் பிரச்னை குறித்து பேரவையில் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது அவர் பேசியதாவது:
ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையில் தமிழ கத்தின் உரிமைகளை எள்ளளவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.தமிழகத்தின் உரிமைகளுக்காக அனைவ ரும் ஓங்கிப் பேசியிருக்கிறார்கள். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்தப் பிரச்னையில், தமிழகம் ஓரணியில் இருக்கி றது என்பதை எடுத்துக் காட்டிய அனைவருக் கும் நன்றி.இந்த ஒற்றுமையும், பாசப் பிணைப்பும் இருந்தால் பல பிரச்னைகளில் நமக்கு வெற்றி கிடைக்கும்.ஒகேனக்கல்லில் ஒரு கும்பலால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்தும், பெங்களூ ரில் திங்கள்கிழமை நடந்த நிகழ்வுகள் குறித் தும் பலர் பேசினார்கள்.
கர்நாடக அரசு மற்றும் சில விஷமிகள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும், தமிழகத் தின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், இந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் உறுதியாக எடுத்துக் கூறினார்கள்.இந்தப் பிரச்னையில் முதல்வர் பின்னால் அணிவகுத்து நிற்போம் என்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் உறுதி கூறினார்கள்.பிரதமருக்கு கடிதம்: ஒகேனக்கல் பிரச்னை யில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று மார்ச் 17-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதி னார்.இந்தத் திட்டம் 2 மாவட்டத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களுக்கு குடிநீர் அளிக்கும் திட்டம்.
குடிநீருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தேசிய குடிநீர் கொள்கை கூறுகிறது.கர்நாடகம் ஒப்புதல் அளித்த பிறகே...: மத் திய அரசு, கர்நாடக அரசு அதிகாரிகளுடன் பேசி, கர்நாடகம் பெங்களூருக்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம், தமிழகம் தன் பகுதி யில் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றிக் கொள் ளலாம் என்று ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகே இந்தத் திட்டம் தீட்டப்பட்டது.
இது மனிதாபிமான பிரச்னை. நாம் யாரு டைய பாகத்திலும் பங்கு போடவில்லை. தமி ழகப் பகுதியில் இருந்துதான் தண்ணீர் எடுக்கி றோம். குடிநீருக்காகவா சண்டை போடுவது? கர்நாடகத்தில் சிலர் வேகத்தை காட்டியிருக் கிறார்கள். பக்கத்து மாநிலங்களுடன் நல்லுற வைக் காக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் பெருந்தன்மையைக் கடைபிடிக்கிறார்.
முதல்வர் கவலை:
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேம்பாலத் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் ஏற்பட் டுள்ள ஆபத்துகள் பற்றி நினைக்கும்போது கண்ணீர் வருகிறது என்றார்.தேச நலனில் அவருக்குள்ள அக்கறையை, பெருந்தன்மையைக் இது காட்டுகிறது.ஆனால் பெருந்தன்மையை மட்டுமே கடைபி டித்து, இருப்பதையும் விட்டுவிட முடியாது என்றார் துரைமுருகன்.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment