Friday, April 4, 2008

காலியிடங்களை நிரப்பாமல், வேளாண்துறையை சீரமைத்ததன் மர்மம் என்ன?

சென்னை, ஏப். 4: காலியிடங்களை நிரப்பாமல், வேளாண்து றையை மறுசீரமைத்ததன் மர்மம் என்ன? என்று அதிமுக எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ண மூர்த்தி சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பி னார்.பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேளாண்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

காலியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகுதான் வேளாண்துறை மறு சீரமைக்கப்படும் என்று அமைச்சர் வீர பாண்டி ஆறுமுகம் அறிவித்திருந்தார். ஆனால் காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே, வேளாண்துறை மறு சீரமைக்கப்பட்டுள் ளது. அதன் மர்மம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன். திமுக ஆட்சியில் விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் கள். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்தத் திட்டமும் இல்லை.எண்ணெய் பனையிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் ஆலைகள் அமைப்பது பற்றி பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.ஆனால் இந்த ஆலைகள் எப்போது அமையும்? எத்தனை ஏக்கரில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங் கள் இல்லை. இது பற்றி அமைச்சர் விளக்கம் தர வேண்டும்.

வெளிநாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு, சிறப்பு பொரு ளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விவசாய நிலங்கள் தாரை வார்க்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.காவிரி நீர் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை, பாலாறு பிரச்னை ஆகியவை தீராத பிரச்னைகளாக உள்ளன. இவற்றை தீர்க்க அரசு முன்வர வேண்டும்.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:

வேளாண்துறையில் 8,600-க்கும் அதிகமான பணியாளர்கள் மூன்று அடுக்கு முறையில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்தனர். இப்போது அவர்கள் இரண்டு அடுக்கு முறையில் வட்டார அளவில் பணி அமர்த்தப் பட்டுள்ளனர். விவசாயிகள் ஒரே இடத்தில் தொழில்நுட்பத் தக வல்களை பெற்று பயனடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்து டன்தான் வேளாண்துறை சீரமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த மர்மமும் இல்லை.

No comments: