Friday, April 4, 2008

திருப்பரங்குன்றத்தில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை, மார்ச் 31: சிறப்பு பொருளாதார மண்ட லங்கள் என்ற பெயரில் விளை நிலங்கள் கையகப்படுத்தப் படுவ தைக் கண்டித்து, திருப்பரங்குன் றம் ஒன்றியம் வளையங்குளத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 2) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலா ளர் ஜெயலலிதா அறிவித்துள் ளார். இதுகுறித்து சென்னையில் திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக அரசு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் கிராமங்களில் உள்ள விளை நிலங் களை கையகப்படுத்தி வருகிறது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருமங்க லம் தொகுதிக்குட்பட்ட சோளங்குருணி, வளை யங்குளம், நல்லூர், எலியார்பத்தி, நெடுமதுரை ஆகிய கிராமங்களில், ஏழை விவசாயிகளுக்குச் சொந்தமான ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் திமுக அரசு இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இந்தப் பகுதிகள் அதிமுக-வுக்கு சாதகமானவை என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விவசா யிகளை அங்கிருந்து வெளியேற்ற திமுக அரசு திட் டமிட்டுள்ளது.விலைவாசி மேலும் உயரும்: அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்கெனவே விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.இந்த நேரத்தில் விவசாய நிலங்களை கையகப்ப டுத்தினால் விலைவாசி மேலும் உயரும். மின்சாரத் துக்கு விடுமுறை அளித்து, ஒளியை விரட்டி தமி ழர் இல்லங்களில் இருளைப் புகுத்தியிருக்கிறார் கருணாநிதி.

திமுக அரசின் இந்த மக்கள் விரோதப்போக்கை கண்டித்து திருப்பரங்குன்றம் ஒன்றியம் வளையங் குளத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 2) அதிமுக சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் பி.எச்.பாண்டியன், மதுரை புறநகர் மாவட்டச் செயலா ளர் எம். ஜெயராமன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொள்வார்கள் என்று ஜெயல லிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments: