Friday, April 4, 2008

பயிர்க் கடன் வட்டி குறைப்பு

சென்னை, மார்ச் 20: விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க் கடனுக்கான வட்டி 5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் க.அன்பழகன் அறிவித்தார்.இது குறித்த விவரம்:

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க் கடனுக்கான வட்டி2006-2007-ம் ஆண்டில் 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகவும்,2007-2008-ம் ஆண்டில் 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.விவசாய பொருளாதார நிபுணர்களின் கருத்தை ஏற்று பயிர்க்கடன் வரும் நிதி ஆண்டில் 4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.2008-2009-ம் நிதி ஆண்டில் ரூ.1,500 கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க ஆவன செய்யப்படும்.

கூட்டுறவு வங்கிகளுக்குரூ. 1,150 கோடி இழப்பீடு:

சுமார் ரூ. 7,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு கடந்த இரண்டுஆண்டுகளில் ரூ. 3,304 கோடிவழங்கப்பட்டது. வரும் நிதிஆண்டில் மேலும் ரூ. 1,150கோடி இழப்பீடு வழங்கப்படும்.

உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பு:

தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக விவசாய உற்பத்தி 2006-2007-ம் ஆண்டில் 82.63 லட்சம்டன்னாக அதிகரித்தது. 2007-2008-ம் ஆண்டில் மொத்த உணவுதானிய உற்பத்தி ஒரு கோடி டன்னுக்கும் அதிகமாக இருக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல் கொள்முதல்விலைகோதுமைக்கு இணையாக நெல்லுக்கும் உரிய விலைகிடைக்கச் செய்யும் நோக்கில்குவிண்டாலுக்கு ரூ. 50 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சன்ன ரக நெல்லுக்கான விலை குவிண்டாலுக்குரூ. 825 ஆக உயர்ந்துள்ளது. நெல்லுக்கான கொள்முதல்விலையை ரூ. 1,000 ஆக உயர்த்தமத்திய அரசை மாநில அரசுதொடர்ந்து வலியுறுத்தும்.கடந்த ஆண்டில் வெள்ளத்தினால் ஒன்றரை லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டநெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமைடந்தன. இந்த இழப்பை ஈடுகட்ட 3,60,954 விவசாயிகளுக்குரூ. 56.5 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயிர் காப்பீடுசெய்து கொள்ள உதவும் வகையில், காப்பீட்டுத் தொகையில் 50சதவீதத்தை அரசே வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ்பயிர்க் காப்பீடு செய்து கொள்ள25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 40கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.18.75 லட்சம் ஏக்கரில்செம்மை நெல் சாகுபடி:குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெறசெம்மை நெல் சாகுபடி முறைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறை 10 லட்சம் ஏக்கரில்நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.விவசாயப் பணிகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு,தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியம் வழங்கப்படும்.பயிறு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் ஆகியவை மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பயிறு வகைகளைகொள்முதல் செய்யும்.

No comments: