சென்னை, ஏப். 1: சுனாமியால் சேதமடைந்த பூம்புகாரை சீர மைக்க ஒதுக்கப்பட்ட ரூ. 69 லட் சம் எங்கே? என்று பாமக எம்.எல்.ஏ. மு.க. பெரியசாமி கேள்வி எழுப்பினார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை, இதுகுறித்து நடைபெற்ற விவாதம்:
மு.க. பெரியசாமி (பாமக):
2004-ம் ஆண்டு சு ன ô மி யி ன் போது பூம்புகா ரில் உள்ள சிலப் பதிகார கலைக் கூடம், பூங்கா, தங்கும் விடுதி ஆகியவை கடுமையாக சேதம டைந்தன.அதனைச் சீரமைக்க ரூ. 69 லட்சம் ஒதுக்கப்பட்டது.ஆனால் இந்த நிதி பயன்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை.அந்த நிதி எங்கே உள்ளது? சிலப் பதிகார கலைக் கூடம் இருண்டு போய் உள்ளது. அது சீரமைக் கப்படுமா?
சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன்:
பூ ம் பு க ô ரி ல் உள்ள 6 குடில் கள் சுனாமியால் முழுவதும் சேத ம û ட ந் த ன .இதனை சீர மைக்க ரூ. 69 லட்சம் நிதி ஒதுக் கப்பட்டது.இதுபற்றி ஆய்வு செய்த பொதுப்பணித் துறை பொறியா ளர்கள் குடில்களை சரி செய்ய முடியாது. இடித்துவிட்டு தான் கட்ட வேண்டும் என்று கூறிய தால், மேற்கொண்டு பணி நடை பெறவில்லை.
அதற்காக ஒதுக் கப்பட்ட ரூ. 69 லட்சம் அப்ப டியே உள்ளது.புதிதாக குடில்களை கட்ட இடங்களைக் தேடி வருகிறோம்.ரூ. 31.23 லட்சம் செலவில் பூம்புகாரிலுள்ள மன்றங்கள், பூங்காக்கள், சுற்றுலா வளாகங் கள் ஆகியவற்றில் தற்போதுள்ள மின் சாதனங்களை மாற்றவும், புதிய மின் விளக்குகளைப் பொருத்தவும் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.சிலப்பதிகார கலைக் கூடம், இலஞ்சி மன்றம், பாவை மன்றம், நெடுங்கல் மன்றம், கொற்றப் பந் தல் ஆகியவை ரூ. 35.11 லட்சம் செலவில் பொதுப்பணித் துறை மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment