Friday, April 4, 2008
கூட்டுறவுச் சங்க செயலர் பதவிக்கு வங்கி அதிகாரி நியமிக்கப்படுவாரா?
சென்னை, ஏப். 3: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செய லாளர் பதவிக்கு வங்கித் துறையில் பயிற்சி பெற்ற அதிகாரிகளை நியமனம் செய்வது தொடர்பாக மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி தெரிவித்தார்.சட்டப் பேரவையில் வியாழக்கிழமை, கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவா தம்: பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): கிராமங்களில் உள்ள சில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ரூ. 50 கோடி, 60 கோடி அளவுக்குகூட வைப்புநிதி உள்ளது.ஆனால் இந்த வங்கியை செயலாளர் ஒருவரே நிர்வகிக்கிறார். அந் தச் செயலாளர் பதவியில் 25 ஆண்டுகளாக ஒருவரே நீடிக்கிறார்.இதனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளர் அப்பகுதியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்கிறார்.எனவே இந்த வங்கிகளின் செயலாளர் பதவிக்கு வங்கித் துறையில் பயிற்சி பெற்ற அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும்.அமைச்சர் கோ.சி. மணி: இது குறித்து கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்படும்.ஜி.கே. மணி (பாமக): சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதியில் உள்ள எனது சொந்த ஊரான கோவிந்தப்பாடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைக்க அரசு முன்வருமா? அமைச்சர் கோ.சி. மணி: கூட்டுறவு வங்கி அமைக்கப்பட வேண்டு மானால் அந்தப் பகுதியில் குறைந்தது 2,000 ஹெக்டேர் விவசாய நிலம் இருக்க வேண்டும். ரூ. 2 கோடி அளவுக்கு கடன் கொடுக்கப் பட்டு, ரூ. 5 லட்சம் வட்டி வருவாய் வரக்கூடிய அளவுக்கு வாய்ப்பு கள் இருக்க வேண்டும்.அப்படி இருந்தால்தான் அங்கு தொடக்க வேளாண்மை கூட்டு றவு வங்கி தொடங்க முடியும். ஆனால் அதற்கான தகுதிகள் கோவிந் தப்பாடியில் தற்போது இல்லை. தகுதிகள் இருப்பதை உறுப்பினர் நிரூபித்தால் இதுகுறித்து அரசு பரிசீலிக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment