சென்னை, ஏப். 1: ஜெயங்கொண் டத்துக்கு, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்து வது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று ஊரக வளர்ச்சி, உள்ளாட் சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டா லின் தெரிவித்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை, கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து நடைபெற்ற விவாதம்:
து. அமரமூர்த்தி (காங்கிரஸ்):
ஒரு காலத்தில் நகர்ப்புற மக்க ளுக்கு மட்டுமே பாதுகாக்கப் பட்ட குடிநீர் கிடைத்து வந்தது.இப்போது சாதாரண கிராம மக்க ளுக்கும் கிடைக்க, இந்த அரசு திட் டம் தீட்டியுள்ளது.பெரம்பலூர், அரியலூர் மாவட் டங்களில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அது போல ஜெயங்கொண்டத்துக்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட் டத்தை அரசு செயல்படுத்த வேண் டும்.
அமைச்சர் மு.க. ஸ்டாலின்:
ஜெயங்கொண்டத்துக்கு கொள்ளி டம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கும்.அரியலூர் தொகுதி, திருமானூர் ஒன்றியம் அழகிய மணவாளன் ஊராட்சியைச் சேர்ந்த மேலவரப் பங்குறிச்சியில் 3 ஆழ்துளை கிண றுகளும், கீழவரப்பங்குறிச்சியில் ஒரு ஆழ்துளை கிணறும் அமைக் கப்பட்டு, மக்கள் தொகைக்கு ஏற்ப மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது.ஆனாலும் இந்தப் பகுதிகள், தற் போது ஆய்வில் உள்ள திருமானூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 58 குடியி ருப்புகளுக்கான கொள்ளிடம் கூட் டுக் குடிநீர் திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளன.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment