Friday, April 4, 2008

யோகாசனம் கற்றால் யோகம் வருமா?

சென்னை, மார்ச் 31: யோகாச னம் கற்றால் யோகம் கிடைக் கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப் பேரவை யில் தெரிவித்தார்.பேரவையில் திங்கள்கி ழமை, கேள்வி நேரத்தின் போது இது குறித்து நடை பெற்ற விவாதம்:

விடியல் சேகர் (காங்கிரஸ்):

அரசு, தனியார் பள்ளிகளில் யோகாசனத்தை கட்டாயப் பாட மாக்க வேண்டும். மரம் நடும் விழா நடத்தியதுபோல, ஈஷா யோகா மையம், உலக அறிவுத் திருக்கோயில் போன்ற அமைப்பு கள் மூலம் பள்ளிகளில் யோகாச னம் கற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வாரத்துக்கு இரண்டு பாடவேளைகள் உடற்கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.அதில் யோகாசனமும் கற்றுத் தரப்படுகிறது. யோகா கற்றால் மன இறுக்கம் குறைகிறது. உடல் ஆரோக்கியம் ஏற்படுகிறது. கலை ஞர் 84 வயதிலும் 24 வயது இளை ஞரைப்போல சுறுசுறுப்பாக இருப்பதற்கு யோகாசனமே கார ணம்.

ஆழியாறு யோகா மையம் மூலம் இதுவரை, 1,10,000 ஆசிரி யர்களுக்கு யோகாசனம் கற்றுத் தரப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ. 1.61 கோடி ஒதுக்கியுள்ளது.இந்த ஆண்டு மேலும் 80,000 ஆசி ரியர்களுக்கு யோகாசனம் கற்றுத் தரப்படும்.

ஜி.கே. மணி (பாமக):

சர்க் கரை நோய், இதய நோய் போன் றவை இப்போது பள்ளி மாணவர் களுக்கும் வருகிறது. உணவு பழக் கமும், உடற்பயிற்சி இல்லாததும் தான் இதற்கு காரணம். எனவே மாணவர்களுக்கு யோகாசனத்தை யும், விளையாட்டையும் கட்டாய மாக்க வேண்டும். எம்.எல்.ஏக்க ளுக்கும் யோகாசனம் கற்றுத்தர வேண்டும்.

தங்கம் தென்னரசு:

உடற்கல் விக்கு திமுக அரசு மிகுந்த முக்கி யத்துவம் அளித்து வருகிறது.2006-2007-ம் ஆண்டில் 168 உடற் கல்வி ஆசிரியர்களும், 2007-2008- ம் ஆண்டில் 439 உடற்கல்வி ஆசி ரியர்களும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.எம்.எல்.ஏ.க்களை பொறுத்த வரை யோகம் இருந்தால் யோகம் (யோகாசனம்) கிட்டும்.

அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:

யோகாசனம் செய்ய வேண்டுமா னால் காலை 5.30 மணிக்கு எழுந் திருக்க வேண்டும். சுமார் 10 எம்.எல்.ஏ.க்களாவது தயார் என் றால், அண்ணாநகரில் உள்ள ஆசன ஆண்டியப்பன் மூலம் எம்.எல்.ஏ. விடுதியில் யோகாச னம் கற்றுத்தர ஏற்பாடு செய்யப்ப டும்.

ஜி.கே. மணி (பாமக):

தினமும் காலையில் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்தால் சர்க்கரை நோய் வராது என்று கடந்த ஆண்டு ஆர்க்காடு வீராசாமி பேரவையில் கூறினார்.அவரது ஆலோசனையை நாங் கள் இன்றுவரை பின்பற்றி வருகி றோம்.

எஸ்.வி. சேகர் (அதிமுக):

தின மும் காலையில் ஒரு லிட்டர் தண் ணீர் குடித்தால் சர்க்கரை நோய் வராது என்பதில் உண்மை இல்லை. பெற்றோர்களுக்கு சர்க் கரை நோய் இருந்தால் பிள்ளைக ளுக்கு நிச்சயம் சர்க்கரை நோய் வரும். தெரியாதத் தகவல்களை அவையில் கூற வேண்டாம்.

வி.பி. துரைசாமி (பேரவை துணைத் தலைவர்):

யோகம் இருந்தால் யோகம் கிட்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி னார். அது என்ன யோகம் என்று சொன்னால் நல்லது.

தங்கம் தென்னரசு:

அவர வர்க்கு என்ன யோகம் வேண் டுமோ, அந்த யோகம் கிடைக்கும்.பேரவை துணைத் தலைவர் யோகா கற்றால் கோபம் குறையும்.ராஜ யோகம் கிடைத்தாலும் கிடைக்கும்.

ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக) :

யோகாசனம் கற்றால் யோகம் கிடைக்கும். என்ன யோகம் என்பது பரம ரகசி யம்.

No comments: