சென்னை, ஏப். 1: துணை மின் நிலை யம் வேண்டும் என்று கோரிக்கை வைக் கும் உறுப்பினர்கள், அதற்கான நிலத்தை ஏற்பாடு செய்துக் கொடுத் தால் அமைக்கப்படும் என்று மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.பேரவையில் செவ்வாய்க்கிழமை, கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து நடைபெற்ற விவாதம்:
க.நெடுஞ்செழியன் (பாமக):
கபிலர் மலை பகுதியில் குறைந்த மின் அழுத் தத்தால் அடிக்கடி பாதிப்பு ஏற்படுகி றது. மின் மோட்டார்கள் பழுதாகின் றன.எனவே ஜேடர்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:
கபி லர்மலை ஜேடர்பாளையத்தில் 110/11 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, ஜேடர்பாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப் பட்டு அந்தத் துறையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத் ததும், நிலம் கையகப்படுத்தப்பட்டு, வாரிய ஒப்புதல் பெறப்பட்டு துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
க. நெடுஞ்செழியன் (பாமக):
பர மத்தி ஒன்றியம் வெள்ளிப்பாளையத் தில் துணை மின் நிலையம் அமைக்க மக்கள் நிலம் தர தயாராக இருக்கிறார் கள். அங்கு துணை மின் நிலையம் அமைக்கப்படுமா?
அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:
துணை மின் நிலையம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் உறுப்பி னர்கள், நிலத்தைப் பெற்று தந்தால் மார்க்கெட் விலையைக் கொடுத்து வாங்கி, அங்கு துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
எஸ்.ஆர். ராஜா (திமுக):
தாம்பரம் தொகுதியில் ஈஞ்சம்பாக்கம், சிட்லப் பாக்கம், மேற்கு தாம்பரம் ஆகிய இடங் களில் துணை மின் நிலையம் அமைக் கப்படுமா?
அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:
தமிழ்நாட்டிலேயே தாம்பரம் தொகுதி யில்தான் அதிகமான துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அந்தப் பகுதிகளில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அதிகமாக இருப் பதால், மூன்று துணை மின் நிலையங் கள் திறக்கப்பட்டன. மேலும் ஆறு இடங்களில் துணை மின் நிலையம் அமைக்க அனுமதி தரப்பட்டுள்ளது.உறுப்பினர் கேட்கும் இடங்களில் நிலத்தைப் பெற்று தந்தால் அங்கு துணை மின் நிலையம் அமைக்கப்ப டும்.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment