Friday, April 4, 2008

தைரியம் இருந்தால் எழுந்து பேசுங்கள்

சென்னை, ஏப். 1: ""தைரியம் இருந்தால் எழுந்து பேசுங்கள்,'' என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பேரவைத் தலைவர் எச் சரிக்கை விடுத்தார்.சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்விகளைக் கேட்க விரும்புபவர்கள், கைகளை உயர்த்தி பேரவைத் தலைவரின் கவனத்தை ஈர்ப்பார்கள். பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர்கள் பலர் கைகளை உயர்த்தினார்கள். ஆனால் பேரவைத் தலைவர் அவர்களை அழைக்கவில்லை.

உடனே தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகக் கூறி கூச்சலிட்டனர்.செவ்வாய்க்கிழமையும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூச்சலிட, அவர் களை நோக்கி, ""தைரியம் இருந்தால் எழுந்து பேசுங்கள்'' என்று பேர வைத் தலைவர் எச்சரித்தார்.இதைப் போல் தங்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதாக பாமக எம்.எல்.ஏக்களும் கூச்சலிட்டனர்.பாராட்டு தேவையில்லை: கேள்வி நேரத்தின்போது, அதிமுக உறுப் பினர் ஆர். சின்னசாமி, ""நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய்ப்பளித்த பேரவைத் தலைவருக்கு நன்றி' என்றார். அப்போது குறுக்கிட்ட பேர வைத் தலைவர், ""உங்கள் பாராட்டு எனக்குத் தேவையில்லை'' என்றார்.

No comments: