Friday, April 4, 2008

வெள்ளச் சேதத்தை பார்வையிட மத்தியக் குழு நாளை வருகை

சென்னை, ஏப். 4: தமிழக வெள் ளச் சேதத்தை பார்வையிட, மத்தி யக் குழு ஞாயிற்றுக்கிழமை தமிழ கம் வருகிறது.இதுகுறித்து வெள்ளிக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, வெள்ளச் சேதத்தைப் பார் வையிட மத்தியக் குழு தமிழகம் வருகிறது. ஏப்ரல் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நான்கு நாட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களுக்குச் சென்று, வெள்ளச் சேதத்தை மத்திய குழு ஆய்வு செய்ய இருக்கிறது.தமிழகத்தில் மார்ச் மாதம் ஏற் பட்ட பெருமழை, வெள்ளத்தி னால் பெருத்த சேதம் ஏற்பட்டது.24 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் அதிகமான ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் உயிரிழந்தன.

பாதிக்கப்பட்ட மாவட்டங்க ளுக்கு நிவாரணம் வழங்க, பேரி டர் நிவாரண நிதியிலிருந்து ரூ.100 கோடி வழங்கி மார்ச் 25-ம் தேதி அரசு உத்தரவிட்டது.பாதிக்கப்பட்ட விவசாயிகள், கால்நடைகளை இழந்து தவிக்கும் குடும்பங்கள், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க, கூடுதலாக ரூ. 75 கோடி வழங்க முதல்வர் கருணாநிதி உத்த ரவிட்டுள்ளார்.அதையும் சேர்த்து, வெள்ள நிவாரணத்துக்காக இதுவரை ரூ.175 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பயிர்ச் சேதத்துக்கு, இரண்டு ஏக்கர் அளவுக்கு மட்டுமே நிவார ணத் தொகை வழங்கப்படும் என்ற உச்சவரம்பை நீக்கி சேதமடைந்த அனைத்துப் பயிர்களுக்கும், ஏக்க ருக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டது.அதுபோல கால்நடை இழப்புக் கும், எண்ணிக்கை உச்சவரம்பை தளர்த்தி இறந்த அனைத்துக் கால் நடைகளுக்கும் நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டது.

No comments: