Friday, April 4, 2008

நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்க முடியாது

சென்னை, ஏப். 4: ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் கட்டப் பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்க முடியாது என்று வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.சட்டப் பேரவையில் வெள்ளிக்கி ழமை, கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

ஜி. லதா (மார்க்சிஸ்ட்):

குடியாத் தம் நகராட்சியில் மூன்று வார்டுக ளில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார் கள். அவர்களுக்கு பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படவில்லை. அவர் களுக்கு பட்டா வழங்க அரசு முன்வருமா?

அமைச்சர் ஐ.பெரியசாமி:

ஏரி, குளம், வாய்க்கால் போன்ற நீர்நிலை புறம்போக்காக இருந்தால் பட்டா வழங்க முடியாது.அப்படி பட்டா வழங்கினால் எதிர்காலத்தில் விவ சாய நிலங்கள் பாதிக்கப்படும்.

பி.கே. சேகர்பாபு (அதிமுக):

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி, எழில் நகர், எம்.ஜி.ஆர் நக ரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்படுமா?

அமைச்சர் ஐ. பெரியசாமி:

திமுக அரசு எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பட்டா வழங்கி வரு கிறது. பட்டா வழங்குவதற்கான குறைந்தபட்சத் தொகையை செலுத் திய பிறகு எழில் நகர், எம்.ஜி.ஆர் நகர் மக்களுக்கு சென்னை மாநக ராட்சி அனுமதி பெற்று பட்டா வழங்கப்படும்.

பி.கே. சேகர்பாபு (அதிமுக):

அதி முக ஆட்சியில் ரூ. 3,600 கொடுத்தால் கிரயப் பத்திரம் வழங்கப்பட்டது. இப் போது ரூ. 60,000 கொடுத்தால்தான் கிரயப் பத்திரம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ரூ. 3,600 பெற்றுக் கொண்டு கிரயப் பத்திரம் வழங்க வேண்டும்.

அமைச்சர் ஐ. பெரியசாமி:

கடந்த இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சி யில் 4,16,423 இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜி.கே. மணி (பாமக):

திருப்பூர், மேட்டூரிலும் பட்டா வழங்க வேண்டி யுள்ளது. இந்தப் பகுதிகளில் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் ஐ. பெரியசாமி:

சட்ட மன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்ப டும்.

No comments: