Friday, April 4, 2008

மத்திய அரசு தலையிட பேரவை தீர்மானம்

சென்னை, ஏப். 1: ஒகேனக்கல் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதா கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஒகேனக்கல் பிரச்னையில் கடந்த ஆறு நாட்க ளில் இரண்டாவது முறையாக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 27-ம் தேதி முதலில் ஒரு தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. பெங்களூரில் தமிழ் சங்கம் மீது திங்கள்கிழமை தாக்குதல் நடந்த தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பேரவையில் செவ்வாய்க்கிழமை ஒகேனக்கல் பிரச்னை குறித்து கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப் பாட்டை காக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. எனவே உடனடியாக, தமிழக மக்க ளின் உரிமைகளைக் காக்க மத்திய அரசு முன் வர வேண்டும்.மார்ச் 27-ம் தேதி, பேரவையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதன் விளைவை நாம் அறிந்து கொள்வதற்கு முன்பே, மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நெருக்க டிக்கு, அவசியத்துக்கு ஆளாகி இருக்கிறோம்.

தமிழர்கள் என்றாலே அலர்ஜி: நமக்கும் கர் நாடகத்தில் உள்ள மொழி வெறியர்கள் சிலருக் கும் இடையே ஏற்பட்டுள்ள இந்தக் கசப்பு, ஒரு வகையில் வரவேற்கத்தக்கக் கசப்பாகத் தான் இருக்கிறது. பேரவையில், இன்று ஒரு நாள் தான் எல்லோரும், ஒரே கருத்தில், ஒரு தீர்மா னத்தை முன்மொழிந்து, வழிமொழிந்து நிறை வேற்றி இருக்கிறோம்.தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் என்றாலே, கர்நாடகத்தில் உள்ள மொழி வெறியர்கள் சில ருக்கு அறவே பிடிப்பதில்லை. அப்படி ஒரு "அலர்ஜி' அவர்களுக்கு ஏற்பட்டு நம்மை வெறுப்பதையே தொழிலாக, வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

திருவள்ளுவருக்கே மரியாதை இல்லை: அந்த வெறுப்பு நீக்கப்படாமல் இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு என்று சொல்வ தெல்லாம், வெறும் வாய் மொழியாக இருக் குமே தவிர, வாய்மை நிறைந்ததாக இருக்க முடி யாது.உலகம் போற்றும் உத்தம ஞானி, தமிழர்க ளுக்கு குறளைத் தந்த எம்மான் அய்யன் வள்ளு வருக்கு கர்நாடகத்தில் மதிப்பு இல்லை. பத்தாண்டுக்கும் மேலாக பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் வாயிலில் வைக்கப்பட்ட திருவள்ளு வர் சிலை திறக்கப்படாமல் துணியால் மூடப் பட்டுள்ளது.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் வரை, பெங்களூரில் எந்த நிகழ்ச்சிக்கும் செல்ல மாட்டேன்.பயிர் பச்சைக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொன்னவர்கள் இன்று உயிர் காப்பதற் கும் தண்ணீர் கிடையாது என்று சொல்கிற அளவுக்கு ஒகேனக்கல் பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார்கள்.

மார்ச் 27 தீர்மானம்:

""தமிழகம் எப்போதும் தன் பக்கத்து மாநிலங்களுடனும், அந்த மாநில மக்களுடனும் நட்பையும், நல்லுறவையும் பேணி வளர்த்து வருகிறது. எனவே, ஒகேனக் கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்ற மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும், உதவியையும் தமிழக அர சுக்கு வழங்க வேண்டும். கர்நாடக அரசு கடைப் பிடித்து வரும் எதிர்ப்பு போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்'' என்றும் மார்ச் 27-ம் தேதி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கர்நாடகத்துக்கு கண்டனம்:அமைதி காக்கும் நோக்குடனும், மாநிலங்களுக்கு இடையே ஒற் றுமை காணவும் அவையில் தீர்மானம் நிறை வேற்றினோம்.

ஆனால் கர்நாடகத்தில் உள்ள சில வெறியர் கள் அந்த தீர்மானத்துக்கு எதிராக, தமிழக மக்க ளின் நலன்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் போக்கினையும், நடந்த கலவரங்களையும் சட் டப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.இனி என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து, அணி வகுப்பது, பணி முடிப்பது பற்றி அனைத் துக் கட்சிகளையும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார் கருணாநிதி.

No comments: