Friday, April 4, 2008

சொல்வது சுலபம், செய்வது கடினம்

சென்னை, மார்ச் 31: சொல்வது சுல பம், செய்வது கடினம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.வெள்ள நிவாரணத்துக்குக் கூடு தல் நிதி வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்த தற்குப் பதிலளிக்கும் வகையில் கரு ணாநிதி இவ்வாறு கூறினார்.கேள்வி -பதில் வடிவில் திங்கள் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

வெள்ள நிவாரணத் தொகையை ஏக்கருக்கு ரூ. 7 ஆயிர மாக உயர்த்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ் ணசாமி கூறியுள்ளார்.வெள்ளத்தால் சேதமடைந்த பயிர் களுக்கு ஹெக்டேருக்கு ரூ, 4000 அதாவது ஏக்கருக்கு ரூ. 1,600 வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறை கூறுகிறது.விவசாயிகளின் துயரத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்காக, இந்தத் தொகையை உயர்த்தி ஏக்க ருக்கு ரூ. 3,000 வழங்க உத்தரவிட்டுள் ளோம்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கி ரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகி யோரிடம் பேசி உரிய தொகையை கிருஷ்ணசாமி பெற்றுத் தந்தால் அவர் தெரிவித்த ஆலோசனையை சுலபமாக நிறைவேற்றலாம். சொல் வது சுலபம், செய்வது கடினம்.

மண்டல் கமிஷன் பரிந்துரை களை நிறைவேற்ற ஆணையிட்ட தற்காகப் பிரதமர் பதவியை இழந்த வி.பி. சிங்குக்கு தமிழகம் முழுவ தும் பிரமாண்டமான வரவேற்புக் கூட்டங்களை திமுக நடத்தியது.அந்தக் கூட்டத்துக்கு யாரும் போகக் கூடாது. வீட்டிலிருந்து கூட அவரை யாரும் பார்க்கக் கூடாது என்று அறிக்கை விட்ட ஜனநாயகத் தலைவர் (?) ஒருவர், தமிழக சரித்திரத்தில் இடம் பெற் றுள்ளார்.2011-ல் பாமக தலைமையில் ஆட்சி அமையும். அந்த ஆட்சி யின் முதல்வர் போடுகின்ற முதல் கையெழுத்து மதுவிலக்கு கொண்டு வரும் உத்தரவாகத்தான் இருக்கும் என்று பாமக தலைவர் கூறியுள்ளார்.அந்த வாய்ப்பு அவருக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான், மதுவிலக்கு பற்றி அவர் பேசுவதை எல்லாம் பொறுமையாகக் கேட் டுக் கொண்டிருக்கிறோம்.

அவர் கள் ஆட்சிக்கு வந்து கள்ளுக் கடை, பிராந்திக் கடைகளை ஒழிக்கட்டும்.மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்ட ரூ. 60,000 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி, மயக்கமடைந்த விவசாயிக்கு தெளிக்கும் தண்ணீ ரைப் போன்றது என்று பாமக நிறு வனர் ராமதாஸ் கூறியுள்ளார்.மயக்கம் அடைந்தவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவனை எழுப்புவதுதான் முதல் கடமை.அதைத்தான் மத்திய அரசு செய்தி ருக்கிறது.

அதிமுக ஆட்சியை விட நிதி ஒதுக்கீடு அதிகம்:

நிதிநிலை அறிக்கையில் சில முக்கிய துறைக ளுக்கான நிதி ஒதுக்கீடு அதிமுக ஆட்சியைவிட குறைக்கப்பட்டுள் ளதாக அதிமுக புரளி கிளப்புகி றது. அது உண்மையல்ல என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.

No comments: