சென்னை, ஏப். 2: எதிர்பார்த்தது இல்லாத, ஏமாற்றம் அளிக்கும் பட் ஜெட்டாக தமிழக பட்ஜெட் உள்ளது என்று பாமக சட்டமன்றக் கட் சித் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தில் அவர் பேசியதாவது:
எதிர்பார்த்தது எதுவும் இல்லாத ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் டாக தமிழக பட்ஜெட் உள்ளது.பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, பொருளாதார ஆய்வு அறிக்கை, கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளதா, இல்லையா என்பது பற்றிய செயல் அறிக்கை, கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த அளவுக்கு மக் களைச் சென்றடைந்துள்ளன என்பது பற்றிய விளைவு தாக்க அறிக்கை ஆகிய மூன்று அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்.
100 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்:
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான் மையான மக்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 100 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 92 சாதியினருக்கு அளிக் கப்படும் 23 சதவீத இட ஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட் டியலில் உள்ள 108 சாதியினருக்கு அளிக்கப்படும் 20 சதவீத இட ஒதுக் கீடும் மக்கள் தொகை அடிப்படையில் முழுமையாகச் சென்றடைவ தில்லை.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், பெரும்பான்மை சமுதா யமாக உள்ள வன்னிய சமுதாயத்துக்கு 9 சதவீத ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கிறது. இதற்கான புள்ளிவிவரங்களை முதல்வரிடம் அளிக்கத் தயாராக இருக்கிறேன்.
தனியார்துறையில் இட ஒதுக்கீடு:
நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு ஆகியவற்றில் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.தனியார் துறையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர வேண்டும்.தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மிகவும் பிற்ப டுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக் களுக்கு பின்னடைவு பணியிடங்களுக் கான காலியிடங்களை நிரப்ப மீண் டும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்ப டுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் பொருளாதார ரீதியாக முனேனேறாமல் அந்த மாநிலம் முன்னேற முடியாது. எனவே அவர்கள் வங்கி மூலம் கடன் பெற்று பஸ் வாங்க அரசு உதவ வேண்டும். அந்த பஸ்களை வாடகைக்கு எடுத்து அரசு இயக்க வேண்டும்.கைத்தறி நெசவாளர்கள், விசைத்தறி நெச வாளர்கள் வாங்கிய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார் ஜி.கே. மணி.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment