Friday, April 4, 2008

விவசாயிகளுக்கும் சுய உதவிக் குழுக்கள்

சென்னை, மார்ச் 20: விவசாயிகளுக்கு 10,000 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் க. அன்பழகன் அறிவித்தார்.நிதிநிலை அறிக்கையில் இது குறித்துஅவர் வெளியிட்ட அறிவிப்பு:

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுவங்கிகள் மூலம் கடன் பெறும் ஒரு லட்சம் விவசாயிகளை உறுப்பினர்களாகக்கொண்டு 10,000 சுய உதவிக் குழுக்கள்அமைக்கப்படும்.இந்தக் குழுக்களுக்கு அரசின் சார்பில்ரூ. 10 கோடி சுழல் நிதி வழங்கப்படும்.இதன் மூலம் விவசாயிகள் தங்கள் தேவைகளுக்காக உடனடியாகசுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெறலாம்.

இலவச மின்சாரம் வழங்குவதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டமின்வாரியத்துக்கு அரசின் மானியமாக, வரும் நிதி ஆண்டில் ரூ.268 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10,000 கறவை மாடுகள்:மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10,000 உயர் கலப்பின கறவைமாடுகள் வழங்கப்படும்.பால் உற்பத்தி செய்யத் தகுந்த 200 கிராமங்களில் தமிழ்நாடுபால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் மூலம் இரண்டு ஆண்டுகளில் ரூ. 22 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.இதனால் 5,500 பெண்கள் பயன் அடைவர்.

No comments: