Friday, April 4, 2008

புத்தக பதிப்பாளர்கள்மற்றும் விற்பனையாளர்கள், நரிக்குறவர்கள் ஆகியோருக்கு தனி நலவாரியம்

சென்னை, மார்ச் 20: நெசவாளர்கள், புத்தக பதிப்பாளர்கள்மற்றும் விற்பனையாளர்கள்,கேபிள் டிவி தொழிலாளர்கள்,நரிக்குறவர்கள் ஆகியோருக்குதனி நலவாரியம் அமைக்கப்படும்என்று நிதி அமைச்சர் க. அன்பழகன் அறிவித்தார்.நிதிநிலை அறிக்கையில் அவர்இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பு:

புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் அந்தத்துறையில் பணிபுரிபவர்களின்நலனுக்காக தனி நலவாரியம்அமைக்கப்படும்.தமிழ்நாட்டில் உள்ள மூன்றுலட்சம் விசைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில்,கைத்தறி நெசவாளர்களுக்கு உள்ளது போல தனி நலவாரியம்அமைக்கப்படும்.நரிக்குறவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்பட வேண்டும்என்று ஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின்மீதான விவாதத்தில் பேசும்போது, விடுதலைச் சிறுத்தைகள்கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமார்கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி நரிக்குறவர்களுக்குகல்வி, மாற்றுத் தொழில் புரிவதற்கான உதவி அளிப்பதற்காகதனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கேபிள் டிவி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் கேபிள்டிவி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்காக தனிநலவாரியம் அமைக்கப்படும்

No comments: