Friday, April 4, 2008

சேலத்துக்கு மேட்டூர் நீர் சாத்தியமில்லை

சென்னை, ஏப். 2: சேலம் நக ருக்கு மேட்டூரில் இருந்து தண் ணீரைக் கொண்டுவரும் சாத்தி யம் இல்லை என, முதல்வர் கரு ணாநிதி தெரிவித்தார்.பேரவையில் இதுகுறித்து புதன்கிழமை நடைபெற்ற விவா தம்:

ஜி.கே. மணி (பாமக):

சேலம், நாமக்கல் மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் மேட்டூர் நீரைக் கொண்டு வர அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதி:

ஜி.கே.மணி சொல்வதைக் கேட்கும் போது இனிப்பாக இருக்கிறது.ஆனால் இதுபற்றி ஆய்வு செய்த நிபுணர்கள் அவ்வளவு உயரத் துக்கு தண்ணீரைக் கொண்டு செல்வது சாத்தியமே இல்லை என்று கூறிவிட்டனர். எனவே இது நிறைவேற்ற முடியாதத் திட் டம்.

ஜி.கே. மணி (பாமக):

மேட் டூர் அணையில் நீர் குறைவாக இருக்கும்போது தண்ணீரை அவ் வளவு உயரத்துக்கு ஏற்ற முடியா மல் இருக்கலாம். ஆனால் மேட் டூர் அணையில் நீர் நிரம்பி வழி யும்போது கொண்டு செல்ல லாம்.

அமைச்சர் துரைமுருகன்:

மேட்டூர் அணையின் கொள்ள ளவு 120 அடி. 120 அடியிலிருந்து 360 அடிக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல முடியாது.

ஜி.கே.மணி (பாமக):

வேளாண் துறையில் மூன்று சத வீத வளர்ச்சிக்கூட இன்னும் எட் டப்படவில்லை. விவசாயத்தை விட்டு விவசாயிகள் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.எனவே விவசாயத்துக்கு தொழில் துறை அந்தஸ்து வழங்க வேண் டும்.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமு கம்:

வேளாண்மையைத் தொழி லாக ஏற்று தொழிற்கொள்கை யில் முதல்வர் கருணாநிதி அறி வித்துள்ளார்.புதிதாக அறிவிக்கப்பட்ட தொழில் கொள்கையின்படி.மற்ற தொழில்களுக்கு வழங்கப்ப டும் அனைத்துச் சலுகைகளும் வேளாண் தொழிலுக்கும் வழங் கப்படும்.

ஜி.கே. மணி (பாமக):

வெள் ளச் சேதம் போன்ற இயற்கைப் பேரிடர் ஏற்படும்போது நிவார ணம் வழங்க, இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியம் ஒன்றை அமைக்க வேண்டும்.

அமைச்சர் அன்பழகன்:

இயற் கைப் பேரிழப்புகள் ஏற்படும் போது நிவாரணம் வழங்க மத் திய அரசின் ஆலோசனை யின்படி ஆண்டுக்கு ரூ. 250 கோடியில் நிதி ஒதுக்கப்படு கிறது.அதில் 75 சதவீத நிதியை மத்திய அரசு அளிக்கிறது.சேதம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக இருந்தால் மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெற்று நிவாரணம் வழங்கப்படும்.

No comments: