சென்னை, ஏப். 1: பொள்ளாச்சி சிறையில் இரவு 6 மணிக்கு மேல் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கைதிகளிடம் விசாரணை நடைபெறுவதாக அதிமுக எம்.எல்.ஏ.செ. தாமோதரன் தெரிவித்தார்.பேரவையில் செவ்வாய்க்கிழமை, கேள்வி நேரத்தின் போது இதுகுறித்து நடைபெற்ற விவாதம்:
செ. தாமோதரன் (அதிமுக):
பொள்ளாச்சி சிறைச் சாலை மிகவும் பழமையானது. அங்கு 100 ஆண் கைதி களை மட்டுமே அடைக்க முடியும். 18 வயதுக்கு குறை வான கைதிகளை புதுக்கோட்டைக்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.இதனால் ரிமாண்ட் செய்ய அதிக நேரம் செலவாகிறது.இதற்குத் தீர்வாக பொள்ளாச்சியில் புதிதாக கிளை சிறைச் சாலை அமைக்க வேணடும்.
அமைச்சர் ஐ. பெரியசாமி:
பொள்ளாச்சி சிறைச்சாலை யில் இப்போது 72 கைதிகளை அடைக்க வசதி உள்ளது.ஆனால் 27 கைதிகள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சிறைச் சாலைக்கு சுற்றுச் சுவர் கட்ட ரூ. 12.25 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.எனவே பொள்ளாச்சியில் புதிய கிளை சிறைச்சாலை அமைக்கும் திட்டம் அரசிடம் இல்லை.
செ. தாமோதரன்(அதிமுக):
பொள்ளாச்சி சிறைச்சாலை யில் சில பணிகள் நடந்து வருவது உண்மைதான். ஆனால் அங்கு குடிநீர் வசதி, மருத்துவ வசதி, கழிவறை வசதி உள் ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் இரவு 6 மணிக்கு மேல் கொண்டு வரப்படும் கைதிகளிடம், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment