சென்னை, ஏப். 3: தற்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டுக்கு திமுக அரசுதான் காரணம் என்று அதிமுக எம்.எல்.ஏ நத்தம் விஸ்வ நாதன் சட்டப் பேரவையில் குற்றம் சாட்டினார்.பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற மின்சாரத்துறை மானி யக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
தற்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டுக்கு திமுக அரசின் செயலற்றத் தன்மையே காரணம். திமுக ஆட்சிக்கு வந்தாலே மின் தட்டுப்பாடும் வந்து விடுகிறது.மின்தட்டுப்பாட்டை சரிசெய்ய முன்வராமல், மனதில் தோன்றும் காரணங்களைக் கூறியும், தவறான புள்ளிவிவரங்களைத் தந்தும் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி மக்களைத் திசைத்திருப்பி வருகி றார்.முதலில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தேவையான டிரான்ஸ்பார் மர்கள் அமைக்கப்படவில்லை. அதனால்தான் மின் தட்டுப்பாடு, பற்றாக்குறை என்றார்.
பிறகு அதிமுக ஆட்சியில் தொலைநோக்குப் பார்வையோடு, போதுமான மின்னுற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தவில்லை அதனால் மின் தட்டுப்பாடு என்றார்.1996-2001 திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டதைவிட கூடுதலாக 4,000 டிரான்பார்மர்கள் அதாவது 25,403 டிரான்ஸ்பார்மர்கள் 2001-2006 அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டன.2,047 மெகாவாட்டுக்கு திட்டங்கள்: 2001-2006 அதிமுக ஆட் சிக் காலத்தில் 2,047 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
ஆனால் 1996-2001 திமுக ஆட்சியில் வெறும் 560.69 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவே திட்டம் தீட்டப்பட்டது.ரூ. 5,600 கோடி மதிப்பீட்டில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் அதிமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.அதுபோல மத்திய அனல் மின் கழகத்துடன் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.உண்மை இவ்வாறு இருக்கும்போது மின் தட்டுப்பாட்டுக்கு அதி முகதான் காரணம் என்று சொல்ல திமுக அரசுக்கு தார்மிக உரிமை இல்லை.
மத்திய அரசு தடை: அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட மின் திட்டங்களுக்கு அப்போதைய வனத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு தடையாக இருந்தார் என்றார்.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment