Friday, April 4, 2008

நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்: சட்டப் பேரவையில் வாழ்த்து

சென்னை, ஏப். 4: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர் பாக தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளிக்கிழமை சென்னையில் உண்ணாவிர தம் இருந்த தமிழ் திரையுலகத்தினருக்கு தமி ழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு, கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புக ளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றன.இந்தப் பிரச்னை தொடர்பாக கர்நாடகத்தில் நடைபெற்று வரும் சம்பவங்களைக் கண்டித்து தமிழ் திரையுலகத்தினர் வெள் ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரதம் இருந்தனர்.பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், விஜயகாந்த் எழுந்து, உண்ணாவிரதம் இருந்து வரும் திரையுலகினருக்கு பேரவையில் எம்.எல்.ஏ.க்களின் சார்பில் முதல்வர் அல்லது அவை முன்னவர் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

உடனே அவை முன்னவர் க. அன்பழகன், உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும், அனைத்து உறுப்பினர்களின் சார்பில் நன்றி தெரிவித்தார்.அதனை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மேஜையைத் தட்டி வர வேற்றனர்.

No comments: