சென்னை, மார்ச் 31: ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றியத் தில், காவிரி கூட்டுக் குடிநீர் திட் டப் பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவேற்றப்ப டும் என்று ஊரக வளர்ச்சி மற் றும் உள்ளாட்சித் துறை அமைச் சர் மு.க. ஸ்டாலின் தெரிவித் தார். பேரவையில் திங்கள்கி ழமை, கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து நடந்த விவாதம்:
மு. பரஞ்சோதி (அதிமுக):
மணிகண்டம் -காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் சுமார் 150 கிரா மங்களுக்கு குடிநீர் வழங்க அதி முக ஆட்சியில் தொடங்கப்பட் டது. இந்தத் திட்டத்தை, 11 பிரிவுகளாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதில் 6 பிரிவுகளுக்கு டெண்டர் முடி வாகவில்லை. ஐந்து பிரிவுக ளில பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகின்றன.
அமைச்சர் மு.க. ஸ்டாலின்:
இந்தத் திட்டத்துக்கு 2005-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. திட்டப் பணிகள் 11 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அதில் ஐந்து பகு திகளில் பணிகள் நடந்து வருகி றது. மீதமுள்ள 6 பகுதிகளி லும் பணிகள் தொடங்கப் பட்டு வரும் டிசம்பர் மாதத் துக்குள் முடிக்கப்படும்.இந்தத் திட்டம் நிறைவேற் றப்பட்டால் 1,02,000 பேர் பய னடைவார்கள். ஆண்டுக்கு ஒருவருக்கு 40 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment